Friday, February 6, 2015

முடிந்தால் முதலமைச்சரை நியமித்துக் காட்டுங்கள்; ஹக்கீமுக்கு ஜெமீல் சவால்!


முதலமைச்சர் நியமனம் தொடர்பாக  முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்
அனைவரினதும் சம்மதத்தினை பெற்று இறுதி முடிவினை அறிவிக்கும் பணியினை கட்சியின் தலைவர் ஹக்கீம் முன்னெடுத்த போது தான் பிரச்சனை எழ ஆரம்பித்தது.
நேற்று காலை அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஹாபீஸ் நசீர் அஹமதை நியமிக்க முடிவு செய்து அதற்கான பத்திரத்தில் கையொப்பம் இடுமாறு ஹக்கீம் கிழக்கு மகான சபை உறுப்பினர்கள் அனைவரிடத்திலும் பணிப்புரை விடுத்த போது அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் முகத்தை சுளித்துகொண்டு கையொப்பம் இட்ட நிலையில் மாகணசபை உறுப்பினர் ஜெமீலிடம் கோரிய போது முற்றாக தனது மறுப்பை வெளியிட்டார்.
அத்துடன் நேற்று மாலை வேளை ஹக்கீமை சந்தித்த ஜெமீல் ஹாபிசின் இந்த நியமனத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் என்னையும் இந்த பதவிக்கு நியமிக்க வேண்டாம் ஆனால் இது அம்பாறைக்கு உரித்தானது எனவே அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த எவராவது ஒருவருக்கே அது வழங்கப்பட வேண்டும் எனவும் தனது வாதத்தை முன்வைத்தார்.
பல தடவை கட்சியை காட்டிக்கொடுத்தது, கட்சி பல வழக்குகளை சந்திப்பதற்க்கு காரணாமாக இருந்தது, கடந்த காலத்தில் கட்சி தனது சின்னத்தை இழக்க நேரிட்ட ஒருவருக்கு அதுமட்டுமல்லாது கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியின் கட்டுக்கோப்பை மீறி நடந்த ஒருவர், உரிய நேரத்துக்கு பதவியை ராஜினாமா செய்ய முன்வராதவருக்கு எவ்வாறு இந்நியமனத்தை தலைவரால் வழங்க முடியும் என வாதிட்டபோது ஹக்கீமுடன் மேலும் முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது.
இதன் போது வாதப்பிரதிவாதங்கள் முற்றிய நிலையில் ஹக்கீம் இது எனது தனிப்பட்ட முடிவு என்றும் அம்பாறை மாவட்ட மக்களை எவ்வாறு பார்த்துக்கொள்வது என்று தனக்கு தெரியும் என்றும் ஹாபிஸுக்கே இது வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். அத்துடன் ஜெமீலினை இழந்தாவது இந்த பதவியை ஹாபிஸுக்கே வழங்குவேன் என்றும் ஒற்றைக்காலில் நின்றார் ஹக்கீம்.
முடிவாக பல தடவை கையொப்பம் இடுமாறு ஹக்கீம் கோரிய போது ஜெமீல் அதனை காட்டமாக மறுத்து, அம்பாறை மாவட்ட உறுப்பினர் ஒருவருக்கு வழங்குவதென்றால் நான் எனது மாகான சபை உறுப்பினர் பதவியை கூட ராஜினாமா செய்யவும் தயார் ஆனால் அது கட்சிக்கு துரோகமிளைத்தவருக்கு வழங்குவதுதான் உங்கள் முடிவு என்றால் எனது ராஜினாமாவை எனது மக்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுவேன் என்றும் கூறினார் ஜெமீல்.
மேலும் அம்பாறை மாவட்ட மக்களையும் முஸ்லிம் காங்கிரசின் போராளிகளையும் மனங்களில் கரியை பூசிவிட்டு என்னால் இந்த முடிவுக்கு ஒத்துழைக்க முடியாது என்றும் இந்த கட்சியை உயிரோட்டமுள்ள ஒன்றாக வைத்திருந்தவர்கள் அம்பாறை மாவட்ட மக்கள் அவர்களது எண்ணங்களின் பிரதிபலிப்பே எனது இந்த வாதமாகும். உங்களால் முடிந்தால் இக் கருத்தை  மீறி முடிந்தால் முதலமைச்சரை நியமித்து காட்டுங்கள் என சவால் விட்டு விட்டு அவ்விடத்தை விட்டு சென்றார் ஜெமீல் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை.

0 comments:

Post a Comment